உள்ளூர் செய்திகள்

சீர்காழியில் மகிளா காங்கிரஸார் சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து சீர்காழியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-30 14:34 IST   |   Update On 2023-03-30 14:34:00 IST
  • முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம்.
  • சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தீப்பந்தத்துடன் ஜனநாயகத்தை காப்போம் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி தலைவி சித்ரா செல்வி தலைமை வகித்தார்.

நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன், கொள்ளிடம் வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கண்டன உரையாற்றினார்.

இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரியகுமார், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் காங்கிரஸ் துணைத் தலைவர் செலினா நன்றி கூறினார்.

Tags:    

Similar News