உள்ளூர் செய்திகள்

உவரி அருகே ஆட்டோவில் கடத்திய வெள்ளை மண்எண்ணை பறிமுதல்-டிரைவர் கைது

Published On 2022-10-26 09:10 GMT   |   Update On 2022-10-26 09:10 GMT
  • இன்று காலை உவரியில் இருந்து வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.
  • வெள்ளை மண்எண்ணை முறைகேடாக கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் உவரி சோதனைச்சாவடி வழியாக முறைகேடாக மண்எண்ணை மற்றும் குட்கா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் உவரி கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ராதாபுரம் மீன்வளத்துறை இயக்குனர் மோகன்குமார் தலைமையிலான போலீசார் இன்று காலை 5.30 மணியளவில் உவரியில் இருந்து வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அதில் மீனவர்களின் விசைபடகுகளுக்கு தமிழக மீன்வளத்துறை சார்பில் மானியமாக வழங்கும் வெள்ளை மண்எண்ணை சுமார் 400 லிட்டர் திருச்செந்தூருக்கு முறைகேடாக கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து உவரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக ஆட்டோவை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த வள்ளிராஜா (வயது 42) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News