உள்ளூர் செய்திகள்

6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 16 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு

Published On 2023-11-18 16:07 IST   |   Update On 2023-11-18 16:07:00 IST
  • வழக்குப் பதிவு செய்யப்பட்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

சென்னை:

சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் அது உறுதியானது. இதை தொடர்ந்து சென்னையில் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள், 14 போலீசார் என 22 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதற்கான உத்த ரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறும்போது, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும், காவல் துறையினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News