உள்ளூர் செய்திகள்

காணொளி காட்சி மூலம் போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

Published On 2022-09-17 10:32 GMT   |   Update On 2022-09-17 10:32 GMT
  • முதியோர்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி அதிகாரிகளை தேடி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வர தேவையில்லை.
  • கூகுள் மீட் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு புகார் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்.

கோவை 

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக முதல்வர் கடந்த 13-ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தவாறு, கோவை மாநகரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி தொடர்பாக பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி அதிகாரிகளை தேடி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வர தேவையில்லை. தங்களது இருப்பிடத்திலிருந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனை காணொளி காட்சி மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது புகார்களை ஆன்லைன்(ID:onlinegrievance.copcbe@gmail.com) அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் தங்களது இ-மெயிலுக்கு கூகுள் மீட்டிங் லிங்க்

(https://meet288.webex.com/meet/pr26411062314) அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை, கூகுள் மீட் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு புகார் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News