உள்ளூர் செய்திகள்

எரிவாயு தகனமேடை பணி தொடக்கம் மயானத்தில் இருந்த நினைவு மேடைகள் அகற்றம்

Published On 2022-09-15 10:01 GMT   |   Update On 2022-09-15 10:01 GMT
  • தாரமங்கலம் நகராட்சியில் உள்ள மயான நினைவு சின்னங்களை அகற்றி விட்டு பூங்காவுடன் கூடிய புதிய எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதனை தொடர்ந்து மயானத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட நினைவு மேடைகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சியில் உள்ள மயான நினைவு சின்னங்களை அகற்றி விட்டு பூங்காவுடன் கூடிய புதிய எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.

இந்த திட்டத்துக்கு பொது மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் பலமுறை பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வந்தனர். ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில் , எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து எரிவாயு தகனமேடை பணியை தொடக்க அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மயானத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட நினைவு மேடைகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

அப்போது நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, நகரமன்ற தலைவர் குணசே கரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், நகராட்சி முதன்மை பொறியாளர் சரவணன், வார்டு கவுன்சிலர்கள் தனபால், பாலசுந்தரம் மற்றும் பலர் பணியை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News