உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
- என்ஜினீயரிங் 3ம் ஆண்டு மாணவர் வீட்டுவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை.
- புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் மாணவரை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி புதுக்காலனி 3வது தெருைவ சேர்ந்த பிரசாத் மகன் நரேந்திரன் (வயது20). இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
விடுமுறை என்பதால் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் மாயமானார்.
இது குறித்து அவரது தாய் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.