உள்ளூர் செய்திகள்

கண்டமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்-கலெக்டர் ஆய்வு

Published On 2023-03-17 05:38 GMT   |   Update On 2023-03-17 05:38 GMT
  • முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  • மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மாவு அரைக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி:

தேனி மாவட்டம், கடமலை - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட கண்டமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ- மாணவிகளின் எண்ணி க்கை, காலை உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களின் இருப்பு, சமையல் பாத்திரங்களின் எண்ணிக்கை, தண்ணீர் வசதி, மின் வசதி, வழங்க ப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவிகளின் கல்வி யினை ஊக்கப்படு த்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட வும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிட உத்தர விட்டு செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட கடமலை - மயிலாடும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு தொடக்க ப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை தினந்தோறும் அரசின் அட்டவணைப்படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கிட தலைமை ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது என தெரி வித்தார்.

அதனைத்தொடர்ந்து கண்டமனூர் ஊராட்சி க்குட்பட்ட புதுராமசந்தி ராபுரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வீரகாளியம்மன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மாவு அரைக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News