உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலம் லோட்டஸ் புட்வேர் நிறுவனத்தை மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டார். அருகில் நிறுவன துணை தலைவர் அருள்சம்மந்தம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி உள்பட பலர் உள்ளனர்.

போச்சம்பள்ளியில் லோட்டஸ் புட்வேர் நிறுவனத்தை கலெக்டர் ஆய்வு

Published On 2023-06-04 15:18 IST   |   Update On 2023-06-04 15:18:00 IST
  • அவசர சிகிச்சைக்காக இயங்கி வரும் மருத்துவமனை, சுற்றுசூழல் பாதுகாப்பு, பேருந்து வசதிகளை நேரில் பார்வையிட்டார்.
  • அடிப்படை வசதிகள், ஊதியம், போக்குவரத்து வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் செய்யாறு சிறப்பு பொருளாதா மண்டலம் லோட்டஸ் புட்வேர் நிறுவனத்தை கலெக்டர் சரயு நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அந்த நிறுவனத்தில் காலணிகள் தயார் செய்யும் பணிகள், காலணிகள் ஏற்றுமதிக்காக பேக்கேஜ் செய்யும் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பெண் பணியாளர்களின் குழந்தைகள் பராமரிப்பு அறை, பணியாளர்களின் அவசர சிகிச்சைக்காக இயங்கி வரும் மருத்துவமனை, சுற்றுசூழல் பாதுகாப்பு, பேருந்து வசதிகளை நேரில் பார்வையிட்டார்.

மேலும், நிறுவன உற்பத்தி பிரிவு மேலாணர்கள் காலணி உற்பத்தி, மூலப்பொருட்கள் வருகை, ஏற்றுமதி, பணியாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், ஊதியம், போக்குவரத்து வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.

இந்த ஆய்வின் போது, நிறுவனத் துணைத் தலைவர் அருள்சம்மந்தம், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மோழி, தனி தாசில்தார் கங்கை மற்றும் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News