உள்ளூர் செய்திகள்

சிறப்பாக பணிபுரிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திராவுக்கு, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பதக்கம் வழங்கினார்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

Published On 2022-08-15 10:20 GMT   |   Update On 2022-08-15 10:20 GMT
  • 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் எந்திரம் வழங்கினார்.
  • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

நாட்டின் 75 -வது சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ணத்தில் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வை–யிட்டனர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் கவுரவித்தார்.

இதையடுத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பேரு உதவி புரிந்த 25 பேருக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் இயந்திரம் வழங்கினார். பயனாளிகள் ஐந்து பேருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதியாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினார். நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வென்ற நான்கு பேருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கி கௌரவித்தார். சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர விரைவு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, முதியோர் உதவி தொகை பெறும் 20 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியம் 2 பேருக்கு ரூ.75 ஆயிரம் வழங்கினார். விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதே போல் பல்வேறு திட்டத்தின் கீழ் பயனாளி–களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.1,00,36,964 (ரூ. 1 கோடியே 36 ஆயிரத்து 964) மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இது தவிர பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், நம்ம ஊரு தஞ்சாவூர் கிராமிய பாடல், பரதம் மற்றும் கிராமிய பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் இந்த கலைநிகழ்ச்சியை அனைவரும் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்திரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி. கயல்விழி, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், போலீசார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News