உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

Published On 2023-06-16 09:06 GMT   |   Update On 2023-06-16 09:06 GMT
  • மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
  • பள்ளி மாணவர்களிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஆடாசோலையில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.6.49 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணி களை விரைவாகவும் தரமா கவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அடுத்தபடி யாக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு போடப்பட்டு வரும் பைப்புகளின் எடை, அகலம் உள்ளிட்ட அம்சங்க ளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.

ஊட்டி அணிக்கொரை பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட போக்கு வரத்து சாலைப்பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆடாசோலை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலைக்க டைக்கு சென்ற கலெக்டர் அங்கு நடப்பு மாதத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கிய விவரம், மீதம் உள்ள அரிசி, சர்க்கரை, பாமாயில் ஆகிய பொருட்களின் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடைஅளவு ஆகிய வற்றை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆடாசோலை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் எடை, உயரம், உணவின் தரம் மருந்து பொருட்களின் இருப்பு ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது.

தூனேரி ஊராட் சிக்கு உட்பட்ட அணிக் கொரை தொடக்கப்பள்ளி யில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய சேமிப்பு அறை மற்றும் சமையலறை ஆகிய வைற்றை பார்வையிட்ட கலெக்டர் அம்ரித், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாண வர்களிடம் கைகழுவும் முறை குறித்து அறிவுரை வழங்கியவர், நன்றாக படிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் அபாயகரமாக உள்ள மரங்களின் கிளை களை வெட்டி அகற்றும்படி அதிகாரிகளிடம் தெரி வித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அம்ரித் ஆய்வு நடத்தியபோது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வ குமரன், வட்ட வழங்கல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஊட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி நந்தகுமார், தூனேரி ஊராட்சி அணிக் கொரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சீதா மற்றும் பலர் உடன் இருந்த னர்.

Tags:    

Similar News