உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்ட ேபாது எடுத்த படம்.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.27 லட்சம் உண்டியல் வசூல்

Published On 2023-11-30 07:27 GMT   |   Update On 2023-11-30 07:27 GMT

விழுப்புரம்:

மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கையை மாதந்தோ றும் எண்ணுவது வழக்கம். அதன்படி அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலி ங்கம், செஞ்சி ஆய்வர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தி ல்குமார் பூசாரி, ஆகியோ ர் முன்னிலையில் உ ண்டியல்கள் திறந்து எண்ண ப்பட்டன.

இதில் 27 லட்சத்து ஆயிரத்து 917 ரூபாய் ரொக்கமும், 70 கிராம் தங்க நகைகளும், 240 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News