உள்ளூர் செய்திகள்
மழையின் காரணமாக இடிந்து விழுந்தது: 5 பெண் குழந்தைகளுடன் வீடு இல்லாமல் தவிக்கும் குடும்பம்
- சூளகிரி அருகே செம்பரசனப்பள்ளியில் மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததால் 5 பெண் குழந்தைகளுடன் வீடு இல்லாமல் கூலித்தொழிலாளி தவித்து வருகின்றார்.
- அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக ராஜாவின் வீடு இடிந்து விழுந்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட செம்பரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி சித்ரா. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக ராஜாவின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
பல மாதங்களாக முறையான வீடு இல்லாமல் வறுமையில் 5 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் குடும்பத்திற்கு சம்மந்தபட்ட அதிகாரிகள் முன்வந்து வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.