உள்ளூர் செய்திகள்

நடிகர் விஜய் குறித்து அவதூறு - கோவை பா.ஜ.க. பெண் பிரமுகர் மீண்டும் கைது

Published On 2023-06-24 11:45 GMT   |   Update On 2023-06-24 11:45 GMT
  • முதல்வர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க. பெண் பிரமுகர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டார்.
  • கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி ஜாமீன் வழங்கக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்

சென்னை:

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (56). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறு தகவல்களைப் பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் என்பவர் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக உமா கார்கி மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா கார்கியை கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News