உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு தென்கன்றுகள் வழங்கப்பட்ட காட்சி.

மாப்பிள்ளையூரணியில் 33 பேருக்கு தென்னங்கன்று, பனை விதைகள் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் வழங்கினார்

Published On 2022-09-21 09:30 GMT   |   Update On 2022-09-21 09:30 GMT
  • 33 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், பனை விதைகள் வழங்கப்பட்டது.
  • மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது மாப்பிள்ளையூரணி ஆகும். இந்த ஊராட்சி பகுதியில் விவசாய மற்றும் வேளாண்மை சார்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் குடியிருக்கும் பயனாளிகள் ஒரு நபருக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 33 பேருக்கும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 2 ஆயிரம் பனை விதைகள் வழங்கும் திட்டம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி, ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News