டெம்போ மோதி தேங்காய் வியாபாரி சாவு
- கிருஷ்ணகிரி நோக்கி சென்ற மினி டெம்போ எதிர்பாராத விதமாக பெரியசாமி மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகில் உள்ள மந்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது27). தேங்காய் வியாபாரியான இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு சந்தேஷ் (8) என்ற மகனும், பாரதி (6), யாதினி என்ற மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு வந்த பெரியசாமி வியாபாரத்தை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்தங்கரையில் இருந்து மத்தூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்ற மினி டெம்போ எதிர்பாராத விதமாக பெரியசாமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.