உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு- தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

Published On 2022-11-30 21:44 IST   |   Update On 2022-11-30 21:44:00 IST
  • பயணிகள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
  • கொக்கிலமேடு, வெண்புருஷம் பகுதி மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்க சிரமப்படுகின்றனர்

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் அதிக நேரம் பொழுதை கழிக்கும் முக்கிய இடமான கடற்கரை கோயில் தென்பகுதியில் தற்போது கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலின் சுழற்சி அலையானது மணலை அரிக்கும் அளவிற்கு, அழுத்தமாக வருவதால் பயணிகள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இது போன்ற கடல் அரிப்பு ஏற்படும் காலங்களில் அப்பகுதியில் உள்ள கொக்கிலமேடு, வெண்புருஷம் பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வைக்க சிரமப்படுகின்றனர். இதனால் அங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சுற்றுலா பயணிகள் கடலில் குளிப்பதை தவிர்க்கவும் இந்த தூண்டில் வளைவு உதவும் என கடலோர பாதுகாப்பு குழும உயர் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

Similar News