உள்ளூர் செய்திகள்

துப்புரவு ஊழியர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

Published On 2022-12-06 09:30 GMT   |   Update On 2022-12-06 09:30 GMT
  • இங்கு குப்பையை கொட்ட கூடாது என்று கூறி குப்பையை கொண்டு சென்ற பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மேலும் இதுகுறித்து மல்லூர் போலீஸ் நிலையத்தி லும் புகார் கொடுத்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரமனூர் பகுதியில் நவீன மின்மயானம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனால் அங்கு கொட்ட பட்டு வந்த குப்பைகள் அருகில் உள்ள பனங்காடு பெரியேரி பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த பகுதி விவசாயிகள் இங்கு குப்பையை கொட்ட கூடாது என்று கூறி குப்பையை கொண்டு சென்ற பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரை சிறை பிடித்து

போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மல்லூர் போலீஸ் நிலையத்தி லும் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ்

நிலையத்திற்கு கொண்டு சென்றார்.இதனால் மல்லூர் பேரூ ராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்டு வதற்கு இட மில்லாததால் பேரூராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். 4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு தலைப்பட்சமாக முடி

வெடுத்து அந்த டிராக்டரை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே

உடனடியாக டிராக்டரை விடுவிப்பது டன், தாசில்தார்

மல்லூர் பேரூராட்சி குப்பை களை கொட்ட தனியாக இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் பேரூராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News