உள்ளூர் செய்திகள்
திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- கடந்த வெள்ளிக்கிழமை மர்ம கும்பல் புகுந்து 2 மாணவர்களை அரிவளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
- குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி:
திருத்தணியில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம கும்பல் புகுந்து 2 மாணவர்களை அரிவளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.