தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டிய காட்சி.
10-ம் வகுப்பு தேர்வில் வெண்ணம்பள்ளி அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
- கடந்த 12 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
- தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் அனைவரும் 100 சதவிதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவிதம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற உறுதுணையாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பி. சேகர் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு 12 ஆண்டுகளாக தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஊக்குவித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நேசபிரபா, ஆசிரியர்கள் சகாய ஆரோக்கியராஜ், சதீஷ், அமலா ஆரோக்கியமேரி, சிவக்குமார், ஆல்பர்ட் டேவிட் மற்றும் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர்கள் கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.