உள்ளூர் செய்திகள்
கால்வாயில் ேதங்கிய கழிவுநீரை அகற்றிய போது எடுத்தபடம்.
சாக்கடை கால்வாய் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
- கழிவு நீர் கால்வாயை அரசு சார்பில் சில வாரம் முன்பு அமைக்கு பணி நடை பெற்றது.
- கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் புதிதாக கழிவு நீர் கால்வாயை அரசு சார்பில் சில வாரம் முன்பு அமைக்கு பணி நடை பெற்றது.
இந்த நிலையில் கட்டபட்ட கால்வாயானது மற்ற கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.