உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் நடந்தது.

நிலுவை மனுக்களை காரணம் சொல்லி பணியாளர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும் -தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-11-21 15:09 IST   |   Update On 2022-11-21 15:09:00 IST
  • நில அளவை அலுவலர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
  • 9 கோரிக்கைகளை தீர்மா னமாக நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி,

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் பொதுக்குழு கூட்டம் தருமபுரி ஆவண காப்பக வளாகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கல்பனா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பெரியசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பிரகாஷ், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ரவி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பனிமலர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த செயற்குழு கூட்டத்தில் செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை, தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது.

இதனை அடுத்து மாநில மையம் களப்பணியாளர்கள் பணி சுமையை குறைத்து விடவும், நெறிப்படுத்திடவும் மனித சக்திக்கு மீறிய செய்மான குறியீட்டினை கட்டாயம் ஈட்ட வேண்டும் என்ற சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும். செய்த பணிகளை கருத்தில் கொள்ளாமல் நிலுவை மனுக்களை காரணம் சொல்லி பணியாளர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 கோரிக்கைகளை தீர்மா னமாக நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் தேர்தல், உறுப்பினர்கள் விவா தம் நடந்தது.மாநில தலைவர் ராஜா நிறைவு றையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் தவமுனி நன்றி கூறினார்.

Tags:    

Similar News