குழந்தையுடன் செவிலியர் இந்துமதி.
சூளகிரி அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த செவிலியர்
- இந்த மருத்துமனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார் சுக பிரசவத்தில் குழந்தைகள் பெற்று செல்கின்றனர்.
- மருத்துவர் சிந்து, செவிலியர் சண்முகபிரியா ஆகியோரும் இதே மருத்து வமனையில் குழந்தைகள் பெற்றது குறிப்பிடதக்கது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார மருத்துமனையில் வட்டார மருத்துவர் வெண்ணிலா மற்றும் மருத்துவர்கள், வட்டார மேற்பார்வையாளர், ஆய்வாளர், பரிசோதகர்கள். செவிலியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மருத்துவம னைக்கு சூளகிரி சுற்றுவட்டாரங்களில் இருந்து பொதுமக்கள் தினம்தோறும் பல்வேறு சிகிச்சை பெற வருகின்றனர். பிரசவத்திற்கு 30 படுக்கை வசதிகள் கொண்டுள்ள இந்த மருத்துமனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார் சுக பிரசவத்தில் குழந்தைகள் பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ராமமூத்து மனைவி இந்துமதி (வயது 26) என்பவர் சூளகிரி வட்டார மருத்துமனை குடியிருப்பில் தங்கியிருந்து இதே அரசுமருத்துமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
2 ஆண்டுக்கு முன் இதே மருத்துவமனையில் முதல் ஆண் குழந்தையை பெற்றார்.அதேபோல் இரண்டாவது பிரசவத்திலும் மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்று தாயும், சேயும் நலமாக உள்ளனர். இவருக்கு மருத்துவர் சாந்தினி மற்றும் வட்டார மருத்துவர் வெண்ணிலா ஆகியோரின் ஆலோசனைபடி பிரசவம் நடந்தது.
பொதுமக்களுக்கு முன் மாதியாக அரசு பணியாளர் அரசு மருத்துமனையில் குழந்தை பெற்றது போல அனைத்து பொது மக்களும் பயன் பெற்று கொள்ள வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பும் இங்கு பணியாற்றிய மருத்துவர் சிந்து,
செவிலியர் சண்முகபிரியா ஆகியோரும் இதே மருத்து வமனையில் சுகபிரசவத்தில் குழந்தைகள் பெற்றது குறிப்பிடதக்கது.