உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-15 13:17 IST   |   Update On 2023-11-15 13:17:00 IST
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலிலும், வன்னியர்களை எம்.பி.சி. பட்டியலிலும் சேர்க்க வேண்டும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்.

சுயாதீன திருச்சபையினர் சொந்த கட்டிடங்களில் நடத்தும் ஆராதனைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் பீட்டர் லாரன்ஸ் தலைமை வகித்தார்.

புனித மரியன்னை கல்வி நிறுவனங்களை சேர்ந்த மரிவளன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News