உள்ளூர் செய்திகள்
சோழசிராமணியில் பகுதி நேர நூலகம் திறப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
சோழசிராமணியில் பகுதி நேர நூலகம் திறப்பு
- சோழசிராமணி மெயின் ரோட்டில் பகுதிநேர நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
- கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி, சோழசிராமணி ஊராட்சி தலைவர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சோழசிராமணி மெயின் ரோட்டில் பகுதிநேர நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி சுப்பிர மணியம் தலைமை வகித்தார். சித்தளந்தூர் கிளை நூலகர் சிவராமன் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி, சோழசிராமணி ஊராட்சி தலைவர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கபிலர் மலை யூனியன் சேர்மன் ரவி, நாமக்கல் மாவட்ட நூலக அலுவலர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினர். கண்ணன், ரங்கசாமி, சந்திரசேகரன், முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் தனசேகரன் நன்றி கூறினார்.