உள்ளூர் செய்திகள்

சின்னவர் டிராபி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு

Published On 2023-01-18 14:55 IST   |   Update On 2023-01-18 14:55:00 IST
  • சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.
  • மஞ்சூர் கெட்சிக்கட்டி மைதானத்தில் நடைெபற்று வந்தது.

ஊட்டி,

தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன், தி.முக இளைஞரணி செயலாளரும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் அறிவுறுத்தல் படி நீலகிரி மாவட்ட இளைஞரணி சார்பில் சின்னவர் டிராபி என்ற மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் கடந்த டிசம்பர் 25-ந் தேதி முதல் மஞ்சூர் கெட்சிக்கட்டி மைதானத்தில் நடைெபற்று வந்தது.

16-ந் தேதி இறுதி போட்டி நடந்தது.

இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமை தாங்கினார். ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பில்லன், கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற கிண்ணக்கொரை அணிக்கு ரூ.5000 ரொக்கபரிசும் மற்றும் சுழற்கோப்பையும், 2-ம் பரிசாக வெற்றி பெற்ற சேரனூர் அணிக்கு 3000 ரூபாய் ரொக்க பரிசும், மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News