- சீரடி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு சென்றார்.
- மிகவும் எளிமையாக வந்த தலைமை செயலாளரை பார்த்த ரெயில் பயணிகள் வியந்து பாராட்டினர்.
சென்னை :
'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் முதல் அரசுமுறை 2 நாள் பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டார். இதற்காக அவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சீரடி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு சென்றார்.
முதல்-அமைச்சருடன், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோரும் ரெயிலில் பயணம் செய்தனர். இந்த அரசு முறை பயணத்துக்காக தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆய்வு பணிக்கு தேவையான கோப்புகளை சாதாரண துணிப்பையில் வைத்தபடி, அதை தன் தோளில் சுமந்தபடி சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். மிகவும் எளிமையாக வந்த தலைமை செயலாளரை பார்த்த ரெயில் பயணிகள் வியந்து பாராட்டினர்.