உள்ளூர் செய்திகள்

முகாமினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொடைக்கானலில் மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-11-23 06:52 GMT   |   Update On 2023-11-23 06:52 GMT
  • மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் கொடைக்கானலில் நடந்தது.
  • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொடைக்கானல்:

மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் கொடைக்கானலில் நடந்தது. கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 17, 18, 21 ஆகிய 3 வார்டுகளை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள மக்களின் குறைகளை ஆன்லைன் மூலம் பெற்று அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொடை க்கானல் நகர் மன்ற தலை வர் செல்லதுரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மனுக்கள் பெற்றனர். 500க்கும் அதிகமான பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய மனுக்கள் அளித்தனர்.

இவர்களுக்கு உடனடி யாக ஆன்லைன் மூலம் பதில் அளிக்க ப்பட்டது. குறைதீர்க்கும் முகாமில் புதிய இலவச வீட்டு மனை பட்டாக்கள், புதிய வீட்டு வரி மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டது. 30 தினங்களுக்குள் இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க ப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே இடத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஒன்று சேர்ந்து பொது மக்களுடைய குறைகளை கேட்டறிந்து அவர்களுக்குரிய நிவா ரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News