உள்ளூர் செய்திகள்

தியாகதுருகத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியை ஊரக வளர்ச்சித் துறை தலைமை பொறியாளர் குட்டாலிங்கம் பார்வையிட்டார்.

தியாகதுருகத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி தலைமை பொறியாளர் ஆய்வு

Published On 2023-06-24 13:01 IST   |   Update On 2023-06-24 13:01:00 IST
  • ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளர்தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்டார்.
  • பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஒப்பந்த தாரரிடம் அறிவுறுத்தினார்

கள்ளக்குறிச்சி,:

தியாகதுருகத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளர் குட்டாலிங்கம் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அப்போது தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்டார்.

கட்டிடத்தில் காற்றோட்ட வசதிக்காக கூடுதல் ஜன்னல் அமைக்க வேண்டும். சிமெண்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். சிமெண்ட் கான்கிரீட் மற்றும் பூச்சு வேலைகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஒப்பந்த தாரரிடம் அறிவுறுத்தினார். இதில் ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட செயற்பொறியாளர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், விஜயன், இளந்தென்றல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உள்பட அலுவலர்கள் அருகில் உள்ளனர்.

Tags:    

Similar News