உள்ளூர் செய்திகள்
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த காட்சி
சிவசுப்பிரமணியர் சாமி கோவிலில் தேரோட்டம்
- தொடர்ந்து மயில் வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
- விநாயகர் சுவாமி திரு த்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி னார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் செங்குந்தர் தெருவில் உள்ள ஸ்ரீ சிவசுப்பி ரமணியர் சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் பெரு விழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மயில் வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் 7 ஆம் நாளான நேற்று காலை ஸ்ரீ விநாயகர் ரத ஆரோகணமும் திருத்தேர் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விநாயகர் சுவாமி திரு த்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி னார்.
இந்த திருத்தேர் விழாவில் செங்குந்தர் மரபினை சார்ந்த ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு ஸ்ரீ விநாயகர் அருள் ஆசி பெற்றுச் சென்றனர். இதை தொடர்ந்து இரவு உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.