குமாரபாளையம் சி.எஸ்.ஐ. பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்ட காட்சி.
அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
- பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன
- தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார்
குமாரபாளையம்:
குமாரபாளையம் லயன்ஸ் சங்கம் சார்பில் நேரு பிறந்த நாள்விழா மற்றும் குழந்தைகள் தின விழா சத்யா நகரில் உள்ள மத்திய அரசின் குழந்தைகள் நல மையத்தில் சங்க தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் நடன போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு லயன்ஸ் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம், கிராமப்புற குழந்தைகள் மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்ராணி, விடியல் பிரகாஷ், சேவற்கொ டியோர் பேரவை பாண்டியன் உள்ளிட்ட பலர் பரிசுகள் வழங்கினர்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். நிர்வாகி லெவி, வார்டு கவுன்சிலர் கனகலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்று, மாறுவேடபோட்டி, ஓவியபோட்டி, உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.