உள்ளூர் செய்திகள்
பேக்கரி கடையில் சிசிடிவி கேமரா திருட்டு
- இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
- அதிகாலை டீ மாஸ்டர் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ராமசாமி கோவில் அருகே பேக்கரி கடை மற்றும் டீக்கடை வைத்துள்ளார்.
நேற்றுமுன் தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
நேற்று அதிகாலை டீ மாஸ்டர் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கடை உரிமையாளர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சண்முகம் உள்ளே சென்று பார்த்தபோது சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு கடையில் இருந்த சிசிடிவி பதிவு ஹார்ட் டிஸ்க் மற்றும் சில பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ஒரு 40 ஆயிரம் ஆகும்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.