உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டினம் ஒன்றியம் சௌட்டஅள்ளி கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு -பொதுமக்கள் புகாரால் பரபரப்பு

Published On 2022-10-01 14:45 IST   |   Update On 2022-10-01 14:45:00 IST
  • சுமார் 5,600 மாமரங்களை வைத்து வளர்த்து வருகிறார்.
  • ஊராட்சி சொத்தாக மாற்றி தருமாறு ஊர் பொதுமக்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.

காவேரிப்பட்டினம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம். சௌட்டஅள்ளி ஊராட்சியில் உள்ள ராமர்பட்டிணம் கிராமத்தில் தனிநபர் அரசாங்கத்திற்கு சொந்தமான காடுகளை அழித்து சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த நிலத்தில் சுமார் 5,600 மாமரங்களை வைத்து வளர்த்து வருகிறார்.

இது சம்மந்தமாக சௌட்டஅள்ளி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலக அலுவலர், வட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வன அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் கிராம பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இனியாவது காலம் தாழ்த்தாமல் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் உள்ள பலன் தரும் மரங்களை சௌட்டஅள்ளி ஊராட்சியின் வளர்ச்சிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊராட்சி சொத்தாக மாற்றி தருமாறு ஊர் பொதுமக்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் கூறுகையில், தனிநபர் ஆக்கிரமிப்பு உன்மைதான். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கிராம சபையில் தீர்மானம் வைக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை தீர்த்து வைக்கப்படவில்லை. எனவே கலெக்டர் இக்கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News