உள்ளூர் செய்திகள்

கடலூரில் மின் ஊழியர் மீது வழக்கு

Published On 2022-10-10 08:15 GMT   |   Update On 2022-10-10 08:15 GMT
  • நேசவள்ளி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • திடீரென்று எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகர் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 38). எலெக்ட்ரிசியன். இவரது மனைவி நேசவள்ளி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், கடந்த அக்டோபர் 1- ந்தேதி மின் ஊழியர் பாஸ்கர் என்பவர் எனது கணவர் ஜேசுதாசை அழைத்துக் கொண்டு தேவனாம்பட்டினம் சுடுகாடு அருகே ட்ரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்ய கூறியதால், எனது கணவரும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.

பின்னர் இவரை மீட்டு கடலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ப்பட்டு, சென்னைக்கு கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். அப்போது இடது கை நீக்கப்பட்டது. ஆகையால் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் மின் ஊழியர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News