உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் ஆசிரியரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

Published On 2022-08-26 11:04 IST   |   Update On 2022-08-26 11:04:00 IST
  • பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் ஆசிரியரை கும்பல் தாக்கியது.
  • 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ. பி காலனியைச் சேர்ந்த செந்தில் மனைவி வஞ்சி க்கொடி (வயது37). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தைகளை நில க்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆட்டோவில் தினந்தோறும் பள்ளிக்கும் அனுப்பி வந்துள்ளார்.

இதில் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு இவர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் இருந்தது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி வஞ்சிக்கொடி யிடம் மணிகண்டன் கடன் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

பணத்தை கேட்டு வஞ்சிக்கொடி துரைச்சாமி புரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அப்போது மணிகண்டன், அவரது தம்பி செந்தில் குமார், உறவினர்கள் பூமா, வெள்ளைத்தாய், பாண்டி, ராஜேஸ்வரி ஆகியோர் தாக்கி உள்ளனர்.

இது குறித்து நில க்கோட்டை நடுவர் நீதிம ன்றத்தில் வஞ்சிக்கொடி புகார் அளித்தார். அதன்பேரில் நிலக்கோட்டை நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் புகார் மீது நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்க ட்ராஜிக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பாலமுருகன், ஆசிரியரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News