உள்ளூர் செய்திகள்

2 பேர் மீது மோதிய கார், இன்சூரன்சை பெற மரத்தில் மோதியதாக புகார்

Published On 2023-05-30 15:18 IST   |   Update On 2023-05-30 15:18:00 IST
  • குருபரப்பள்ளி அருகே சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புகார் அளிக்கப்பட்டது தெரிய வந்தது.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தவறான புகார் அளித்தது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி,

பர்கூரை அடுத்த தண்ணீர்பள்ளத்தை சேர்ந்தவர், 13 வயது சிறுமி; மஜீத்கொல்லஹள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர்கள் 2 பேரும் கடந்த 26&ந் தேதி காலை ஜிட்டோபனப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி மத்தூர் சாலையில் நடந்து சென்ற போது எதிரில் வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதி சென்றது. இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிந்து, இடித்து தள்ளிய காரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த கார் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள ஒரு மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டது தெரிய வந்தது.- போலீசார் அங்கு சென்று காரை பறிமுதல் செய்ய முயன்ற போது அதே நாளில் மாலை குருபரப்பள்ளி அருகே சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புகார் அளிக்கப்பட்டது தெரிய வந்தது.

2 பேரை இடித்து தள்ளிய கார், விபத்துக்குள்ளான காருக்கு இன்சூரன்ஸ் கிடைக்க புளிய மரத்தில் மோதி ஒரு புகார் அளித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து போலீசார் கூறும் போது குருபரப்பள்ளியில் அளித்த புகாரின் பேரில் சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தவறான புகார் அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து புகார் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.

Tags:    

Similar News