உள்ளூர் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி சிக்னல் கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்தது: 4 பேர் உயிர் தப்பினர்

Published On 2022-12-27 14:46 IST   |   Update On 2022-12-27 14:46:00 IST
  • சிறுவன் ஒருவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவன் மீது மோதியது.
  • 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

கடலூர்:

கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. அப்போது சாலை ஓரத்தில் இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டார். பின்னர் சாலையில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீது மீண்டும் கார் மோதி சாலையில் ஓரத்தில் தலை குப்புற பயங்கர சட்டத்துடன் கார் கவிழ்ந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து தூக்கி வீசப்பட்ட மாணவனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 பிள்ளைகளை காரில் இருந்து பாதுகாப்பாக பொதுமக்கள் மீட்டனர். இந்த விபத்தில் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News