தாட்கோ மூலம் மானியத்துடன் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பங்கள்
- ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- வயது வரம்பு 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாட்கோ திட்டம் மூலம் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 2 நபர்களுக்கு ரூ.1.80 லட்சம் மானியம் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த 1 நபருக்கு ரூ.90 ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி, பான் கார்டு, இருப்பிடச் சான்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. தாட்கோவின் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் டான்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும்.
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை டான்செம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.
கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்டைய ஆதிதிராவிட தனி நபர்களுக்ககன திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.