உள்ளூர் செய்திகள்

மழைநீரில் மூழ்கிய பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனையை படத்தில் காணலாம்.

வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் மழைநீரில் மூழ்கிய பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை

Published On 2022-12-13 15:37 IST   |   Update On 2022-12-13 15:37:00 IST
  • நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தும், முட்புதர்கள் மண்டியும் கிட க்கிறது.
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சியில் பொதுபணிதுறை கால்வாய் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது குப்பன் கொட்டாய் பாசன பிரிவு கால்வாய் மூலம் புங்குட்டை ஏரி, மன்னார் குட்டை ஆகிய ஏரிகள் நிரம்பி கடந்த 6 மாதங்களாக உபரி நீரானது தளவாய்ஹள்ளி, புதூர்,ரெட்டியூர், மூங்கப்பட்டி மற்றும் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை, குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலத்திலும் புகுந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் இப்பகுதியில் நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தும், முட்புதர்கள் மண்டியும் கிட க்கிறது.

இந்த உபரிநீர் பேளாரஹள்ளி ஊராட்சி தாமரை ஏரி வரை செல்வதால் இடைப்பட்ட சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நீர் வழிகால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், உபரி நீர் வெளியேற முடியாமல் அரசு போக்குவரத்து பணிமனையிலும் ஆங்காங்கே குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன், பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News