உள்ளூர் செய்திகள்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடன் தொல்லையால் தொழில் அதிபர் தற்கொலை

Published On 2022-11-25 15:15 IST   |   Update On 2022-11-25 15:15:00 IST
  • அர்ஜுன் பாலகிருஷ்ணன் வீட்டின் மேல் வங்கியில் அதிக அளவு கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
  • இன்று காலை அர்ஜுன் பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அம்பத்தூர்:

கொரட்டூரை சேர்ந்தவர் அர்ஜுன் பாலகிருஷ்ணன் (வயது 53). தொழில் அதிபர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடைகள் உள்ளன. இதனை வாடகைக்கு விட்டு உள்ளார். அங்கு அவர் தனக்கு அலுவலகமும் வைத்து உள்ளார்.

அர்ஜுன் பாலகிருஷ்ணன் வீட்டின் மேல் வங்கியில் அதிக அளவு கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

இதற்கிடையே பணத்தை செலுத்ததால் நேற்று அர்ஜுன் பாலகிருஷ்ணனின் வீடு ஜப்தி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு அர்ஜுன் பாலகிருஷ்ணன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் திரும்பி செல்லவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அர்ஜுன் பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் பிரச்சினையில் தொழில் அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News