உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்திற்கு வெளியில் காத்திருக்கும் பயணிகள்.

கடமலைக்குண்டுவில் புதிய பஸ் நிலையத்திற்குள் வர மறுக்கும் பஸ்கள்

Published On 2023-10-21 05:09 GMT   |   Update On 2023-10-21 05:09 GMT
  • கடமலைக்குண்டு புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது முதல் தற்போது வரை பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்களும் வந்து செல்வது இல்லை.
  • தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்க கூடாது என நுழைவாயில் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்தனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்தது முதல் தற்போது வரை பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்களும் வந்து செல்வது இல்லை. மேலும் பஸ் நிலையம் தனியார் ஆட்டோ, லாரி நிற்கும் இடமாக பயன்பட்டு வந்தது.

இதனால் பஸ் நிலையத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களை அதிரடியாக வெளியேற்றினர். மேலும் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்க கூடாது என நுழைவாயில் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்தனர்.

இந்நிலையில் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் ரெங்க ராஜன் துணைத்தலைவர் பிரியா தனபாலன், ஊராட்சி செயலர் சின்னச்சாமி உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசார் உதவியோடு அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் அனுப்பினர்.

மேலும் அனைத்து நேரங்களிலும் பஸ் நிலை யத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என டிரைவர்க ளுக்கு அறிவுறுத்தினர். பல வருடங்களாக பயன்பாடின்றி இருந்த பேருந்து நிலையத்தை தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகத்தினர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News