உள்ளூர் செய்திகள்

விழாவில் வேகவைத்து கொட்டப்பட்டிருந்த தானியங்களை வாரி இரைக்கும் பக்தர்கள்.

அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானகொள்ளை விழா; திரளானோர் பங்கேற்பு

Published On 2023-02-20 12:37 IST   |   Update On 2023-02-20 12:37:00 IST
  • அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • மாலை 6 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ மயான கொள்ளை விழா மாசி மாதம் அம்மாவாசையான நேற்று நடைபெற்றது.

விழாவின் போது பக்தர்களால் வழங்கப்படும் வேகவைத்த தானியங்களை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். பிரசித்திப்பெற்ற இந்தக் கோயிலில் இந்த ஆண்டு மயானக் கொள்ளை விழா பூஜையுடன் தொடங்கியது.

இதையொட்டி காலை கலச பூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான மகாசிவராத்திரி உற்சவம் மயானக்கொள்ளை விழாவை யொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்ட்டது.

தொடர்ந் பரிவார தெய்வங்க ளுடன் சிறப்பு அலங்கா ரத்துடன் அங்கா ளம்மன் அன்ன வாகனத்தில் வீதியுலாக் காட்சி நடை பெற்றது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார்.

அப்போது மயானத்தில் வாழை இலையில் வேகவைத்து கொட்டப்பட்டிருந்த சவாரிகட்ட கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு, பயறு வகைகள் உள்ளிட்ட தானியங்களை பக்தர்கள் வாரி இரைக்கும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடந்தது.

இதில் சுற்று வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கோபி ராஜேந்திரன் செய்திருந்தனர்.

Tags:    

Similar News