உள்ளூர் செய்திகள்

பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் துணிகர திருட்டு

Published On 2022-07-30 09:04 GMT   |   Update On 2022-07-30 09:04 GMT
  • சென்னையில் ரெயில்வேயில் வேலை பார்த்து வரும் ஊழியர் கண்ணன் கொடை விழாவுக்காக நெல்லை வந்துள்ளார்.
  • வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளையர்கள் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

நெல்லை:

நெல்லை பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55).

ரெயில்வே ஊழியர்

இவர் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கோமளவள்ளி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாளையில் உள்ள கோவில் திருவிழாவிற்காக கண்ணன் குடும்பத்துடன் நெல்லை வந்தார். பின்னர் கொடை விழா முடிந்ததும் இன்று அதிகாலை கோடீஸ்வரன்நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய்விட்டது.

மேலும் பீரோவில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் நகை பணம் இல்லாததால் கொள்ளையர்கள் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News