வீட்டின் பூட்டை உடைத்து13 பவுன் தங்க நகைகள் கொள்ளை
- வீட்டின் கதவு பூட்டு உடைபட்டிருப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ரத்னா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- யாரோ மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை திறந்து உள்ளே இருந்த ரூ.1,95,000- மதிப்புள்ள 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் 3வது கிராசில் வசித்து வருபவர் தெய்வம் (வயது38). இவர் கர்நாடக மாநிலம் பொம்மசந்திராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி குடும்பத்துடன், ஒரு விழாவில் கலந்து கொள்ள தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சென்றார். மறுநாள், அவரது வீட்டின் கதவு பூட்டு உடைபட்டிருப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ரத்னா என்பவர், இது குறித்து தெய்வத்திற்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விரைந்து வந்த அவர், வீட்டின் பூட்டை வைத்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை திறந்து உள்ளே இருந்த ரூ.1,95,000- மதிப்புள்ள 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்ததன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.