தருமபுரியில் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தேர்வு முகாம்
- கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
- 18-ந் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவ லகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சஙகம அனைத்து மாவட்டங்களிலும் 14 வயது முதல் 24 வயது வரையிலான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த வீரர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மாணவர்களுக்கான பள்ளி பொதுத் தேர்வுகளின் காரணமாக இந்த முகாம் தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி, தருமபுரி கமலம் இண்டர்நேஷ்னல் பள்ளியில் உள்ள தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையத்தில் வருகிற 22-ந் தேதி சுழற்பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு முகாமும் 23-ம் தேதி வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு முகாமும் காலை 8 மணியளவில் நடைபெறும். இதில் பங்கு பெறுதவற்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றவர்கள் பூர்த்தி செய்து, ஆதார் கார்டு நகலினை இணைத்து வருகிற 18-ந் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகம், 33-கே.தியேட்டர் ரோடு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், புதியதாக பங்கு பெற விரும்புபவர்கள் நேரில் ஆதார் கார்டு, பிறப்பு சான்றுடன் மேற்காணும் விலாசத்திற்கு சென்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.