உள்ளூர் செய்திகள்

   கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய காட்சி.

தருமபுரியில் கிருபானந்த வாரியார் சாமி பிறந்தநாள் விழா

Published On 2023-08-25 10:05 GMT   |   Update On 2023-08-25 10:05 GMT
  • விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.
  • நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தருமபுரி,

தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டையில் பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்ன தான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் சாமி பிறந்தநாள் விழா சிவசுப்பிரமணியசாமி கோவில் பின்புறம் தட்சணாமூர்த்தி தெருவில் நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஊர் பிரமுகர்கள் குமார், டி.ஜி. மணி, சண்முகம், மோகன், மணிவண்ணன், சதாசிவம், இளங்கோவன், நகராட்சி கவுன்சிலர்கள் பாண்டியன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சேகரன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மணிவண்ணன், நிர்வாகிகள் உதயபானு, தவமணி, சேகர், பாபு, சோமசுந்தரம், துரை, பழனிசாமி, பூங்குன்றம், கண்ணன், பசுபதி மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News