உள்ளூர் செய்திகள்

பூமி சமுத்திரம் கிராமத்தில் உள்ள பூனாட்சி அம்மன்-கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-11-27 09:33 GMT   |   Update On 2022-11-27 09:33 GMT
  • அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
  • பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசி பெற்றனர்.

மொரப்பூர்,

காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள பூமி சமுத்திரம் கிராமத்தில் பூனாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவினையொட்டி கடந்த 25 -ம் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் கொடியேற்றுதல், கங்கணம் கட்டுதல் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து 26-ம் தேதி சனிக்கிழமை யாக சாலை ஆரம்பம், பிரவேசம் முதல் கால யாக சாலை பூஜை,பூர்ணாவதி,தீபாதாரணை,பிரசாதம் வழங்குதல் மற்றும் சுமங்கலி பூஜை மங்கள இசையுடன் விமானங்களில் ஸ்தூபி பிரதிஷ்டை செய்தல், மங்கள இசையுடன் யந்திர ஸ்தாபனம்,அஷ்டபந்தனம் மற்றும் கண் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து விழாவின் 3 -ம் நாளான இன்று 2-ம் கால யாகசாலை பூஜை,புண்ணிய வசனம்,நாடி சந்தானம் துவக்கம் பிரம்ம சுத்தி ரக்சன அணிவித்தல்,மந்திர புஷ்பம்,உபசாரம் மகாபூர்ணாவதி, மகா தீபாரதனை யாகத்ரா தானம்,கடம் புறப்படு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மொரப்பூர் சென்ன கேசவ பெருமாள் கோவில் அர்ச்சகர் விஜய் ஆனந்த ராம் ஐயங்கார் குழுவினர் கும்ப லக்கினத்தில் விமான கலசத்திற்கும் மூலவர் பூனாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கோவிலின் கோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கும் தெளிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள இதர கிராமங்களை சேர்ந்த கொங்கு வேளாள கவுண்டர்கள், பூந்துறை காடை குலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசி பெற்றனர்.இவ்விழாவில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழா விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தர்மகர்த்தா செல்லன்,நாட்டு கவுண்டர் தமிழரசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News