உள்ளூர் செய்திகள்

பூமிபூஜையை மேயர் சண். ராமநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பூங்கா அமைக்கும் பணிக்கான பூமிபூஜை- மேயர் அடிக்கல் நாட்டினார்

Published On 2022-08-08 09:55 GMT   |   Update On 2022-08-08 09:55 GMT
  • மாநகராட்சி சார்பில் புதிதாக பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
  • பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை சாலை வருமான வரித்துறை அலுவலகம் பின்புறம் நியூ காவேரி நகர் (பாத்திமா நகர்) அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாகபூங்கா அமைக்க முடிவு செய்யப்ப ட்டது. அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.இதில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கி பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பூங்காவானது 16410 சதுர அடியில் ரூ.31.5 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளது.

இந்த பூமி பூஜை விழாவில் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல தலைவர் ரம்யா சரவணன், கவுன்சிலர் தமிழரசி, சுகாதார ஆய்வாளர் மோகன பிரியதர்ஷினி, பணி ஆய்வாளர் ராமலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News