உள்ளூர் செய்திகள்

  நிகழ்ச்சியில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, சப்-கலெக்டர் சரண்யா ஆகியோர் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

ஓசூர்-பாகலூர் சாலையில் மலர் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை

Published On 2023-08-15 13:51 IST   |   Update On 2023-08-15 13:51:00 IST
  • பணிகளை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, சப்-கலெக்டர் சரண்யா ஆகியோர் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர்.
  • துறை அதிகாரிகள் மற்றும் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில், ஜி.ஆர்டி சர்க்கிள் அருகே, இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஸ்ரீ காளிகாம்பாள் காமட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ரூ.76 லட்சம் மதிப்பில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஓசூரில் கட்டுமானப் பணிகளை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் , மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, சப்-கலெக்டர் சரண்யா ஆகியோர் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர்.

மேலும் இதில், தி.மு.க இளைஞரணி மாநில துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர்கள் சின்னசாமி, சாமிதுரை, துறை அதிகாரிகள் மற்றும் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News