உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.இதில் முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தராஜ் பேசியபோது எடுத்த படம்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சசிகலா எங்களுடன் இணைந்து செயல்படுவார்- கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2022-09-14 15:28 IST   |   Update On 2022-09-14 15:28:00 IST
  • அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.
  • சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி

அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் மது என்கிற ஹேம்நாத் தலைமை தாங்கினார்.

முன்னாள் நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கோவிந்தராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக அமைப்புகளிலும் சிறப்பாக கொண்டாடுவது. தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.

அவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாங்கள் அவருடன் இருக்கிறோம். நிச்சயமாக அ.தி.மு.க. ஒன்றுபடும். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் இணைவார் என தெரிவித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வம், முன்னாள் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதா கார்த்திக், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், ஸ்ரீராமுலு, நிர்வாகிகள் நாகரத்தினம், ராமு, ராஜேந்திரன், கிருபானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News