உள்ளூர் செய்திகள்

குடும்பம் நடத்த வராததால் 2-வது மனைவியை கத்தியால் குத்திய முதியவர் கைது

Published On 2022-09-12 14:59 IST   |   Update On 2022-09-12 14:59:00 IST
  • நேற்று மாரியப்பன் மூக்காக கவுண்டனூருக்கு சென்று கண்ணகியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
  • அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சின்ன ஆலேரஅள்ளி அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது69). இவருக்கு 2 மனைவிகள் உள்ளன. 2-வது மனைவி கண்ணகி.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கண்ணகி பிரிந்து தனது மகள் வீடான மூக்கா கவுண்டனூரில் வசித்து வந்தார்.

மாரியப்பன் குடும்ப நடத்த வருமாறு தனது மனைவி கண்ணகிைய அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதனால் நேற்று மாரியப்பன் மூக்காக கவுண்டனூருக்கு சென்று கண்ணகியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

உடனே கண்ணகியை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து மத்தூர் போலீசார் பெண்ணை தாக்கியதாக வழக்குபதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

Tags:    

Similar News